நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்

பருவ நிலை மாறும்போது அதற்கேற்ப உணவு
பழக்கத்திலும் மாற்றத்தை பின்பற்ற வேண்டும். மழைக்காலம், மற்ற பருவ
காலங்களை விட எளிதில் நோய் பாதிப்புக்கு வித்திடக்கூடியது. அந்த சமயத்தில்
பழங்கள் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
ஏனெனில் அவற்றில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன.
மழை
காலத்தில் மற்றவர்களை விட நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள்
சாப்பிடுவதற்கு சிரமப்படுவார்கள். சாப்பிடும் உணவுகள் கடினமாக இருக்கும்.
அதனால்
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவு வகைகளை கண்டிப்பாக சாப்பிட
வேண்டும். மேலும் உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். அதனால்தான் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் பழங்களை
சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவை ரத்தத்தில்
சர்க்கரையின் அளவுகளை பாதிக்காது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை
கட்டுப்படுத்த உதவும் சில பழங்களும் உள்ளன. அவை குறித்து அறிந்து கொள்வோம்.
வாருங்கள்...
நாவல் பழம்:
இது நீரிழிவு நோயாளிகளுக்கு
அனைத்து வகையான நன்மைகளையும் வழங்கக்கூடியது. ஜர்னல் ஆப் புட் சயின்ஸ்
அண்ட் டெக்னாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நாவல் பழத்தில் ஆண்டி
டயோபெட்டிக் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டு பண்புகள் உள்ளன.
இவை
ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்முறையை மெதுவாக்குவதற்கு உதவியாக
இருக்கும். மேலும் ரத்தத்தில் திடீரென சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான
வாய்ப்புகளை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
ஆப்பிள்:
அதிக
சத்துக்கள் கொண்ட இந்த பழத்தை எந்த பருவத்திலும் சாப்பிடலாம். இது
ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளில் குறைந்த விளைவுகளை
ஏற்படுத்தக்கூடியது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல தேர்வாகவும்
அமைகிறது. இதன் கிளைசெமிக் குறியீடு 39 . அதனால் நீரிழிவு நோயால்
பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆப்பிளை ருசித்து சாப்பிடலாம். ரத்தத்தில்
சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் நீரிழிவு உணவின் ஒரு
பகுதியாக இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
சாத்துக்குடி:
நீரிழிவு
நோயாளிகள் மழைக்காலங்களில் சாத்துக்குடி சாப்பிடலாம். அவை நார்ச்சத்து
நிறைந்தவை. அவற்றின் கிளைசெமிக் குறியீடு 40 முதல் 50-க்குள் உள்ளடங்கி
இருக்கும்.
மேலும் இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் இயற்கையான
சர்க்கரை, மழைக்காலங்களில் ஆரோக்கியமாக இருப்பதற்கு துணைபுரியும்.
அதேவேளையில் சாத்துக் குடியை ஜூஸ் தயாரித்து பருகுவதை தவிர்க்க வேண்டும்.
அதில் செயற்கை சர்க்கரை சேர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக
இருக்காது.
இந்த பழம் குறைந்த கலோரிகளை கொண்டது. இதன் கிளை செமிக்
குறியீடு சுமார் 42. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக
அமைந்திருக்கிறது
செர்ரி:
பெரும்பாலான பழங்கள் ரத்தத்தில்
சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். ஆனால் புளிப்பு தன்மை கொண்ட செர்ரி பழங்கள்
குறைந்த அளவே (20) கிளை செமிக் குறியீட்டை கொண்டுள்ளன. மேலும்
மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு செர்ரி பழம் உதவும்.
இதில்
கலோரிகளும் குறைவாகவே உள்ளது. நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி,
பாலிபினால்கள், செரோடோனின் ஆகியவையும் நிறைந்திருக்கின்றன. அவை நீரிழிவு
நோயைக் கட்டுப் படுத்த உதவுகின்றன.
பிளம்ஸ்:
வைட்டமின்கள்
மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த பழத்தை மழைக்காலங்களில் எந்த கவலையும்
இல்லாமல் தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை
அதிகரிக்காது.
இதன் கிளைசெமிக் குறியீட்டு சுமார் 40 என்ற
அளவில்தான் இருக்கும். மேலும் பிளம்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தக்கூடியது.
பேரிக்காய்:
நீரிழிவு
நோயாளிகளுக்கு மற்றொரு சிறந்த பருவமழை கால பழம், பேரிக்காய். நீரிழிவு
நோய்க்கு, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் மிதமான கிளைசெமிக் குறியீடு
கொண்ட உணவுகளை சாப்பிடவே பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
பேரிக்காய்
நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவக்கூடியது.
இதன் கிளை செமிக் குறியீடு 40-க்கும் கீழாக இருப்பதால் நீரிழிவு
நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக விளங்குகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



