இலங்கையின் அஞ்சல் துறையை உலக தரத்திற்கு மாற்ற நடவடிக்கை!
#SriLanka
#Postal
Mayoorikka
10 months ago
நாட்டின் அஞ்சல் துறையை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்று அதன் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முத்திரை ஊக்குவிப்பு திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
இதன்படி, எதிர்வரும் 10 வருடங்களை இலக்காக் கொண்டு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களின் வளங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை