யாழில் யூடியூப்பருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யூடியூப்பர் கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள யூடியூப்பர் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் முற்படுத்தீய போதே மல்லாகம் நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார். குறித்த யூடியூப்பர் உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் நேற்றைய தினம் (09.03.2025) பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டடிருந்தார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யூடியூப்பர் இளவாலை போலீஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்து காணொளி பதிவு செய்துள்ளார்.
இந்த காணொளியில் பாவிக்கப்பட்ட சொற்பிரயோகங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்நிலையில், குறித்த யூடியூப்பர் நேற்றைய தினம் அந்த வீட்டுக்கு மீண்டும் செல்ல முயன்றவேளை பண்டத்தரிப்பு - சில்லையூர் மத்தி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்போது அவருடன் இன்னும் மூன்றுபேர் என மொத்தமாக நால்வர் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாக்கு மூலம், ஊர் இளைஞர்களின் வாக்குமூலத்தை பெற்றனர்.
அதன்பின்னர் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
'
வற்புறுத்தல், அத்துமீறி வீட்டினுள் உட்புகுதல், தகாத வார்த்தை பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நால்வரில் ஒருவர் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனம் ஒன்றில் பயிலுனராக பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை


