யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரியின் மகனுக்கு பிடியாணை!

#SriLanka
Mayoorikka
1 month ago
யாழ்ப்பாணத்தில்  பொலிஸ் உயர் அதிகாரியின் மகனுக்கு பிடியாணை!

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.

 இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன், பொலிஸ் நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

 முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், மகன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது. அதேவேளை சந்தேக நபரின் தந்தையான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741548940.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!