வடக்கு கிழக்கில் இன்றும் மழை தொடரும் - மீண்டும் 15 ஆம் திகதி முதல் மழை தொடரும் வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை 12 ஆம் திகதி இன்றும் தொடரும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா , இன்றுடன் ஒப்பிடும்போது நாளை சற்று குறைவாகவே மழை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையற்ற அல்லது மிக மிக குறைவான மழையுடன் கூடிய வானிலை நிலவும்.
ஆனால் பின்னர் 15.03.2025 முதல் 25.03.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது இன்றைய நிலையில் மாதிரிகளினடிப்படையிலான எதிர்வுகூறல் ஆகும்.
இதில் மாற்றங்கள் நிகழலாம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீனவர்கள் எதிர்வரும் 13.03.2025 க்கு பின்னர் அவதானத்துடன் கடலுக்கு செல்ல முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



