பெண்ணொருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்திய அதிகாரிகள்!

#SriLanka
Mayoorikka
10 months ago
பெண்ணொருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்திய அதிகாரிகள்!

சிலாபம் - பங்கதெனிய பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை கூட்டுறவு அதிகாரிகள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

 தாக்குதலுக்கு உள்ளான அவர் தற்போது சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது, குறித்த பெண், பங்கதெனிய சந்தியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்திற்குப் பின்னால் ஒரு சமையலறையை கட்டி பல ஆண்டுகளாக சிறு வியாபாரமொன்றை மேற்கொண்டு வருகிறார்.

 அந்தக் கட்டிடம் அண்மையில் சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தால் வாங்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கூட்டுறவு கட்டிடத்துடன் கூடிய நிலத்தை வாங்கிய போதிலும், அந்த பெண் குறித்த இடத்தை விட்டு நகரவில்லை.

 இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து, சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் மற்றும் பிற ஊழியர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

 எனினும், அந்தப் பெண் தமது கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயற்சித்த போதிலும், எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை என சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741728340.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!