கனேடிய இரும்பு மற்றும் அலுமினியத்திற்கான வரிகளை இரட்டிப்பாக்கிய டிரம்ப்

ஓன்டாரியோவில் சில அமெரிக்க மாநிலங்களுக்கான மின்சார ஏற்றுமதியில் 25% கூடுதல் கட்டணம் விதித்ததற்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடிய இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிகளுக்கான திட்டமிடப்பட்ட வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்குவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவின் வடக்கு அண்டை நாடான கனடாவுடனான வர்த்தகப் போர் மேலும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளமான "ட்ருத் சோஷியல்" வெளியிட்ட ஒரு பதிவில், ஓன்டாரியோ மாகாணம் சில அமெரிக்க மாநிலங்களுக்கான மின்சார ஏற்றுமதியில் 25% கூடுதல் கட்டணம் விதித்ததற்கு பதிலடியாக இந்த வரி அதிகரிப்பு வந்ததாக டிரம்ப் குறிப்பிட்டார்.
இரும்பு மற்றும் அலுமினியத்திற்கான புதிய வரிகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
"கனடா நமது அன்புக்குரிய ஐம்பத்தி ஒன்றாவது மாநிலமாக மாறுவதே ஒரே நியாயமான தீர்வு. இது அனைத்து வரிகளையும் பிற பிரச்சினைகளையும் முழுமையாக அழிக்கும்" என்று டிரம்ப் தனது பதிவில் எழுதியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



