மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு! (வீடியோ இணைப்பு )
#SriLanka
#Death
Mayoorikka
1 month ago

அம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் சடலம் இன்று வியாழக்கிழமை (13) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனின் சடலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



