புதிய அரசும் எமது கடலை சீனாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கு தாரைவார்க்க முனைகிறது! வர்ணகுலசிங்கம்

#SriLanka #China
Mayoorikka
3 hours ago
புதிய அரசும் எமது கடலை சீனாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கு தாரைவார்க்க முனைகிறது! வர்ணகுலசிங்கம்

1996ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடற்றொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். புதிய சட்ட மூலத்தை நாம் எதிர்க்கிறோம், குறித்த சட்ட மூல பிரிதிகளில் என்ன இருக்கிறது என்று இதுவரை மீனவர்களுக்கு தெரியாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

 யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட கடற்றொழில் தொடர்பான புதிய சட்ட மூல வரைபை தற்போதைய அரசு சட்ட மூலமாக்க முனைகிறது.

 கடந்த அரசின் காலத்தில் அப்போதைய அமைச்சர் குறித்த புதிய சட்ட மூல வரைபை கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்களை அழைத்து பிரதிகளை வழங்கினார். 

ஆனால் அப் பிரதியில் நடுப் பகுதி அச்சிடப்படாமல் விநியோகிக்கப்பட்டது. அப்போதே மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போது அவ் புதிய சட்டத்தை புதிய அரசு நடைமுறைப்படுத்த முனைகிறது. 1996ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடற்றொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். புதிய சட்ட மூலத்தை நாம் எதிர்க்கிறோம், குறித்த சட்ட மூல பிரிதிகளில் என்ன இருக்கிறது என்று இதுவரை மீனவர்களுக்கு தெரியாது. ஐரோப்பிய நாட்டுப் பிரதிநிதிகளை கூப்பிட்டு கடல்வளத்தை கூறு போட்டு குத்தகைக்கு குடுக்கிற சூழ்ச்சிகளை புதிய அரசும் முன்னெடுக்கிறது. கடலை சீனாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கு தாரைவார்க்க முனைகிறது.

 இது வரைக்கும் கடற்றொழில் சங்கம், சமாசம், சம்மேளனம் புனரமைக்கப்படவில்லை, இதனை புனரமைக்க அமைச்சரால் முடியவில்லை. எமது கடலில் உள்ளூர் இழுவைப் படகுகள், சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. 

இதனைத் தடுத்து நிறுத்த முடயவில்லை. கடலில் அந்திய நாட்டு மீன்பிடி படகுகள் கபளிகரம் செய்கிறது. இன்று நாங்கள் சாப்பிட வழியில்லாமல் இருக்கிறோம். பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கிறது என அவர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741839668.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!