சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் மின்னூட்டம் சாதனங்கள் பயன்படுத்த தடை
#Airport
#Singapore
#Banned
Prasu
12 hours ago

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் power bank என்ற மின்னூட்டம் செய்யும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை சிங்கப்பூரின் Scoot விமானங்களுக்கும் பொருந்தும். ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடப்புக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் power bank சாதனங்களை விமானங்களுக்குள் கொண்டுவர அனுமதி உண்டென அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அவற்றைக் கையோடு எடுத்துச்செல்லும் பைகளில் வைத்திருக்கலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் 100Wh வரை ஆற்றல்கொண்ட சாதனங்களை வைத்திருக்கமுடியும். அதற்கு அதிகமான ஆற்றல் கொண்ட சாதனங்களுக்கு சிறப்பு அனுமதி பெறவேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



