தமிழரசுக் கட்சியின் பிளவு! யார் காரணம்? (வீடியோ இணைப்பு)

#SriLanka #M. A. Sumanthiran #Lanka4 #sritharan #IlankaThamilarasukKadsi
Mayoorikka
1 month ago
தமிழரசுக் கட்சியின் பிளவு! யார் காரணம்? (வீடியோ இணைப்பு)

ஒரு வீடு பாழ் அடைந்த வீடாக உடைந்து எரிந்து சுக்கு நூறாக போகப்போகிறது என்பதை நாங்கள் வருகின்ற செய்திகளின் ஊடாக பார்க்கக் கூடியதாக இருக்கிறது. 

 ஆம் . சுமந்திரன் மற்றும் சிறிதரன் இருவருடைய தன்னிச்சையான தன்னல போக்கு அக்கறையற்ற தனத்தால் தமிழரசுக் கட்சி உடைவிக்கப் போகிறது என்பதை விட உடைந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

 சிறிதரன் மற்றும் சுமந்திரன் மாத்திரம் இதற்கு பொறுப்பு என்று நாங்கள் கூற முடியாது சிறிதரனுடைய பக்கத்தில் நிற்கின்ற அவருடைய ஆதரவாளர்கள் தொண்டர்கள் மற்றும் சிறிதரன் பக்கத்தில் சுமந்திரன் பக்கத்தில் நிற்கின்ற ஆதரவாளர்கள் தொண்டர்கள் இப்படியானவர்கள் ஊடாகத்தான் அதிகமாக இவர்கள் தூண்டப்பட்டு உசுப்பேற்றபட்டு இவர்கள் இந்த கட்சியை உடைக்கின்ற அளவிற்கு கொண்டு போய விட்டிருக்கின்றார்கள்.

 அவர்களுக்கு கட்சியைப் பற்றி மக்களை பற்றி கவலை இல்லை மற்றும் மக்களுக்காக போராடிய 30 வருடமும் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் பற்றிய சிந்தனை இல்லை. ஆனால் இந்த கட்சியை உருவாக்குவதற்கு போராடியதும் இவர்கள் அல்ல மாவை சேனாதிராஜா மற்றும் தந்தை செல்வநாயகம் அவர்கள் மற்றும் சம்பந்தன் ஐயா அவர்கள் இப்படியானவர்கள் சரி தவறு தாண்டி இந்த கட்சியை வளர்ப்பதற்கு ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு அவர்கள் இருக்கும்வரையும் ஒற்றுமையாக இருந்த கட்சியை இடையில் வந்து தங்களுக்கு உரிமை கொண்டாடி தன்னலத்திற்காக தங்களுக்கு உரிமை கொண்டாடி தாங்களும் இந்த கட்சிக்கு சொந்தக்காரர் என சொந்தம் கொண்டாடுகின்றனர்.


 ஏதோ மக்களின் தொண்டர்களாக நாடகம் ஆடுகின்ற சுமந்திரனும் ஸ்ரீதரனுடைய அக்கறையீனத்தினால் தான் அங்கு இருக்கின்ற அங்கத்தவர்கள் தமிழரசு கட்சியில் இருக்கின்ற ஒவ்வொருவரும் பிரிந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளுடன் இணைவதும் புதிய கட்சிகள் ஆரம்பிப்பதும் மற்றும் சுயேச்சை கட்சிகளை ஆரம்பிப்பதாக இருக்கிறார்கள்.

 முக்கியமாக தமிழ் மக்கள் அதுவும் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்கள் நிச்சயமாக இவர்கள் இருவருடைய செயல்பாடுகளையும் அணுகுமுறைகளையும் அவர்கள் செல்லுகின்ற பாதையையும் கவனித்து இவர்களை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளி மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தால் அல்லது ஆதரித்தால் தங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலம் நன்றாக இருக்குமோ அவர்களுக்கு இனம் மதம் மொழித் தாண்டி ஆதரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். 

 அதை சுயேச்சை கட்சியாக இருக்கட்டும் என் பி பி கட்சியாக இருக்கட்டும் அச்சுனா கட்சியாக இருக்கட்டும் அல்லது முன்னணி கட்சியாக இருக்கட்டும் யாருக்கு நீங்கள் வாக்களிக்க விரும்புகிறீர்கள் உங்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ நீங்கள் முடிவு எடுத்து இவர்கள் இருவருடைய அசமங்கப் போக்கையும் இவர்களுடைய பொறுப்பற்ற தன்மையும் தூக்கி எறிந்து இவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்.

 சில வழிகளில் இவர்கள் திருந்தி இவர்கள் ஒற்றுமையாகுவார்களாக இருந்தால் நிச்சயமாக ஆதரிக்கலாமே தவிர இவர்கள் இப்படியே போய் பிரிந்து பிரிந்து பிரிந்து கட்சியை உடைக்கின்ற அளவுக்கு அந்த ஒரு சின்னமாக இருக்கின்ற அந்த வீட்டை பாழடைந்த வீடாக வைத்து பார்க்கின்ற அளவிற்கு இந்த செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கிறது.

 எனவே தயவு செய்து மக்கள் உங்களுடைய நன்மை கருதி உங்களுடைய குடும்பத்தின் அல்லது உங்களுடைய பிள்ளைகளுடைய வருங்கால நலன் கருதி யாரை ஆதரிக்க வேண்டுமோ என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை செய்யுங்கள்.

 சுமந்திரன் மற்றும் ஸ்ரீதர்னுடைய ஆதரவாளர்கள் தொண்டர்கள் கூறுகின்ற விடயம் முரண்பாடான கருத்தை கூறிக் கொண்டிருக்கிறார்கள் முன்பு ஒரே கருத்தோடு இயங்கினார்கள் இப்பொழுது இருவரும் முரண்பாடான கருத்தோடு இயங்குகிறார்களாக இருந்தால் இன்னும் வேறு முரண்பாடுகள் அதற்கு இருக்கிறது.

 இவர்கள் ஒற்றுமை அற்றவர்கள் என்பதில் நிரூபணம் இருக்கிறது சற்று நீங்கள் சிந்தித்து தயவு செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று LANKA4 ஊடகம் மக்களின் நன்மை கருதி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து இணைந்திருங்கள். 

 -இலங்கையன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741870603.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!