திரிகோணமலை மூதூரில் நடந்த கொடூரம்: சகோதரிகள் இருவர் வெட்டிப் படுகொலை

#SriLanka #Trincomalee #Crime
Mayoorikka
1 month ago
திரிகோணமலை மூதூரில் நடந்த கொடூரம்: சகோதரிகள் இருவர் வெட்டிப் படுகொலை

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தாஹாநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் அக்கா, தங்கையென சகோதரிகள் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 இச்சம்பவம் இன்றையதினம்(14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மூதூர் -தாஹாநகரைச் சேர்ந்த சிறிதரன் ராஜேஸ்வரி வயது (68) ,சக்திவேல் ராஜகுமாரி வயது (74) ஆகிய இருவரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 அத்தோடு குறித்த வீட்டிலிருந்த சம்ஹா ஹானி வயது (15) என்ற சிறுமி காயங்களுடன் மூதூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

 குறித்த கொலை இடம்பெற்ற வீட்டுக்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று காலை வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741870603.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!