கோலாகலமாக இடம்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று (15) கச்சத்தீவு தீவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் 3,500க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.
சுமார் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய தீவான கச்சதீவு, இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து மிகவும் தொலைவில் உள்ள தீவாகவும், இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள தீவாகவும் உள்ளது.
கடந்த காலங்களில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அதன் உரிமையின் அடிப்படையில் அரசியல் மோதல்கள் கூட எழுந்தன.
இருப்பினும், 1974 ஆம் ஆண்டில், இலங்கை கச்சத்தீவின் உரிமையைப் பெற்று, இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் அதைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




