படலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிடவுள்ள சிறப்பு அறிக்கை!

படலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
கடந்த வாரம், சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்தா ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியின் அமைச்சரவை கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, படலந்தா ஆணைக்குழு அறிக்கையை எதிர்காலத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆணைக்குழு அறிக்கை தொடர்பான மேலதிக பணிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு சிறப்பு குழுவை நியமிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதும் இது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




