மேர்வின் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
#SriLanka
#Court Order
#Court
Dhushanthini K
3 hours ago

முன்னாள் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (17) அவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இது இடம்பெற்றது.
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலியான பத்திரங்களைப் பயன்படுத்தி தனியாருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த 5 ஆம் திகதி இரவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக மேர்வின் சில்வாவைத் தவிர, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



