அர்ச்சுனா இராமநாதனிற்கு சபாநாயகர் விதித்துள்ள தடை உத்தரவு!
#SriLanka
Mayoorikka
4 hours ago

அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்தார்.
இதன்படி அவரது வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்தும் நீக்குமாறு அவர் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
10 ஆயிரத்து 729 குடும்பங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



