30 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புதல்

#Russia #Ukraine #War
Prasu
5 hours ago
30 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புதல்

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன.

இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியிருப்பதாவது:- உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புதின் நிபந்தனை வைத்துள்ளார். அதில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.

ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரைன் ராணுவ கைதிகளை விடுவிக்கப்படும். உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742402185.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!