வறியவர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய உதவி திட்டம் - இத்தாலி மனித நேய சங்கம்

அனைவருக்கும் இத்தாலி மனித நேய சங்கத்தின் வணக்கம். தன்னுறவுகளைப் போன்று எமது தாயக மக்களையும் நேசிக்கும் நல்லுள்ளங் கொண்ட இவ்வுறவுகள் தமது பங்களிப்பும் வறிய மக்களின் வாசல் தேடி சென்றடைய வேண்டுமென இவர்களின் நிதிப்பங்களிப்பில் புதியதோர் அகவையில் நுளையும் உங்களை வாழ்க வளமுடன் வாழ்த்துவதோடு #கார்மேகம்_பொழிந்தாலும் கஷ்டம் கூடித்தான் வந்தாலும் உங்களது கனிவான சேவையினை இன்முகத்துடன் இடைவிடாது வழங்கிக்கொண்டிருக்கும் சமூக சிந்தனையாளர்.
இன்றைய தினம் 19/03/2025 இத்தாலி BOLOGNAவில் வசிக்கும் மதிப்பிற்குரிய திரு கேதீஸ்வரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப்பங்களிப்பில் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்து தேவையுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியாக வாழும் வயோதிப அம்மாவிற்கு வாழ்வாதார உதவியாக இறைச்சி கோழி வழங்கப்பட்டது.
ஊக்கம் உள்ளோரை ஊக்கப்படுத்தும் திட்டமே எங்கள் பணி,மேலும் பயனடைந்த குடும்பங்கள் சார்பாகவும், இத்தாலி மனித நேய சங்கம் அமைப்பினர் சார்பாகவும், மனமார்ந்த நன்றிகள்.
மற்றும் சிரமம் பாராது இச்செயற்பாட்டினை சிறப்பாக நடைமுறைப்படுத்திய இத்தாலி மனித நேய முல்லைத்தீவு மாவட்ட திருமதி கிறின்சினி (teacher)மற்றும் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் இத்தாலி மனிதநேய சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள் உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கும் கொடுங்கள் நீங்களும் கடவுளாக பார்க்கப்படுவீர்கள்.
எம் சேவை அறிந்து உங்கள் உழைப்பின் ஒரு பங்கை மக்களுக்கு தியாகம் செய்த நீங்கள் போற்றுதற்குரியவர்கள்.
நாங்கள் தனித்து பயணிப்பதைவிட நீங்களும் எங்களோடு இணையும் போதே பெரியளவிளான மாற்றத்தை எம் மக்கள் வாழ்வில் உருவாக்கமுடியும்.
"இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம் என்றும் ஒன்றாக கை கோர்த்து இணைத்திருப்போம்."
நன்றி இத்தாலி
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



