தேசபந்து தென்னக்கோனின் வீட்டில் இருந்து 1000 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
#SriLanka
#Police
#search
#Alcohol
Prasu
4 weeks ago

ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும், 2023.12.31 ஆம் திகதி வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன், தொடர்புடைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 6 பேரை கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த்தியுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



