வறிய எம் ஊர் உறவுகளுக்கு உதவுவோம் - இத்தாலி மனிதநேய மன்றம்

அனைவருக்கும் இத்தாலி மனிதநேய சங்கத்தின் இனிய வணக்கம்
அமரர் வைத்திலிங்கம்(பொன்னுத்துரை) சிவனேசம் அம்மா அவர்களின் நினைவாக முல்லைத்தீவு வலையன் மடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் ,கிணறு ஆகிய இடத்தில் பிராத்தணை வழிபாடுகள் செய்யப்பட்டன.
இன்று
19/03/2025 16 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜேர்மனியில் வசிக்கும்
அன்னாரின் மகன் ஜெயகுமார் அவர்களின் நிதிப்பங்களிப்பில் இத்தாலி மனிதநேய
சங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு வலையன்மடம் கிராமத்தில் அன்னாரின்
ஆத்மாசாந்தி பிரார்த்தனையுடன் தன்னுறவுகளைப் போன்று எமது தாயக மக்களையும்
நேசிக்கும் நல்லுள்ளங் கொண்ட இவ்வுறவு தனது பங்களிப்பும் வறிய மக்களின்
வாசல் தேடி சென்றடைய வேண்டுமென தனது நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு
மாவட்டம் கைவேலி கிராமத்தில் வசிக்கும் மிகவும் வறுமை நிலைக்கு அற்பால் இக்
குடும்பம் உழைத்து வாழ வேண்டும் என்று நேரம் காலம் பராது தமது வாழ்க்கையை
நன்றாக வாழ வேண்டும் என்று அயராது உழைக்கும் இக்குடும்பத்திற்கு கற்றல்
வளர்ச்சிக்காக துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
வறுமையிலும்
சோம்போறியாக இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது .வறுமையிலும் வாழ்விலும்
உழைத்து முன்னேற துடிக்கும் உறவுகளை ஊக்குவிற்போம் நன்றி.
தயாழ
குணம் நிறைந்த மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில்
வழங்கிய நிதியில் பயன்பெற்ற குடும்பம் சார்பாகவும் #இத்தாலி மனித நேய
அமைப்பினர் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு
சிவனேசம் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கும் கொடுங்கள் நீங்களும் கடவுளாக பார்க்கப்படுவீர்கள். எம் சேவை அறிந்து உங்கள் உழைப்பின் ஒரு பங்கை மக்களுக்கு தியாகம் செய்த நீங்கள் போற்றுதற்குரியவர்கள் நாங்கள்
தனித்து பயணிப்பதைவிட நீங்களும் எங்களோடு இணையும் போதே பெரியளவிளான
மாற்றத்தை எம் மக்கள் வாழ்வில் உருவாக்கமுடியும் என்றும் இணைத்திருப்போம்.
"இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம் "
நன்றி - இத்தாலி மனிதநேய சங்கம்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



