இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற நடிகர் சிரஞ்சீவி
மேகாஸ்டார் சிரஞ்சீவிக்கு பிரித்தானிய அரசின் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படத்துறையின் மிகப்பெரிய நட்சத்திரமான மேகாஸ்டார் சிரஞ்சீவி பிரித்தானிய அரசின் "Lifetime Achievement Award" பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்த விருது அன்று லண்டன் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டது.
சினிமாவிற்கும் சமூகத்திற்கும் அவர் செய்த சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. சிரஞ்சீவி நான்கு தசாப்தங்களுக்கு மேலாக திரைத்துறையில் ஒளிர்ந்து, கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமின்றி, சமூகத்தின் நலனுக்காகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
சிரஞ்சீவி சாரிட்டபுள் டிரஸ்ட் (CCT) மூலம் பலருக்கு, குறிப்பாக மருத்துவம் மற்றும் கல்வி துறைகளில் உதவிகளைச் செய்துள்ளார். அவரது நற்பணிகள் சமூகத்தில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விருது இந்திய திரைப்படத்துறைக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவியின் சாதனைகளை பாராட்டினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை