டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

#Canada #Murder #Lanka4 #University
Prasu
1 week ago
டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் டவுன்டவுன் வளாகத்தில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

டொரொண்டோ பொலிசாரின் கொலைக் குற்ற விசாரணைப் பிரிவு இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் College Streetல் உள்ள Leslie L. Dan மருந்தியல் கட்டிடத்திற்கு வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியதல்ல என்று பொலிசார் தெரிவித்திருந்தபோதிலும், பின்னர் இது ஒரு கொலை என உறுதி செய்துள்ளனர்.

மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தாலும், யாரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்த நபரின் அடையாளம் அல்லது சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான தகவல்கள் பொலிசாரால் வெளியிடப்படவில்லை. டொரொண்டோ பொலிசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742629487.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!