இலங்கையில் பல்வேறு பரிமாணங்களாக மாற்றம் பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்!

இலங்கையில் உள்ளூராட்சி சபை என்பது மத்திய அரசு, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள உள்ளூராட்சி அமைப்பாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகக் கருதப்படுகிறது, ஏனென்றால் இது நேரடியாக மக்களின் ஆட்சி மற்றும் அவர்களின் அவசியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கியமான வழி ஆகும்.
உள்ளூர் மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்துதல், அடிப்படை வசதிகளான வீதிகள், குடிநீர், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துதல், மக்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுதல் போன்ற அதன் பணிகளாகும்.
இலங்கையின் உள்ளூராட்சி முறைமை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. உள்ளூர் மட்டத்தில் பொதுமக்களின் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டுச் சேவைகள், பொதுத்தெருக்கள், மக்கள் நலன்புரி வசதிகள், பொழுதுபோக்கு என்பவற்றை நிர்வகித்து பராமரிப்பதற்காக காலனித்துவ ஆட்சிக்கு முன்னதாகவே இலங்கையில் சுயாதீன உள்ளூராட்சி முறைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமையை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
என்றபோதும் கட்டமைப்பு க்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டதாக புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆங்கிலேய அரசு இலங்கையின் வட்டாரங்களில் சில உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கியது. இது மக்களின் சில அடிப்படைத் தேவைகளை பரிசீலனை செய்தது. அதன் பின்னர் 1865ஆம் ஆண்டில் முதலாவது நகராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது.
1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் மற்றும் கிராம அபிவிருத்தி சபைகள் என்பன அவையாகும். பின்னர் கிராம அபிவிருத்தி சபைகள் அகற்றப்பட்டன. இலங்கையில் தற்போது 336 உள்ளூராட்சி சபைகள் உள்ளன.
இவற்றுள் மாநகர சபைகளின் எண்ணிக்கை – 28, நகர சபைகளின் எண்ணிக்கை – 36, பிரதேச சபைகளின் எண்ணிக்கை – 272 என்பனவாகும்.
உள்ளூராட்சி சபைகள் மூலம் உள்ளூர் சட்டதிட்டங்களை உருவாக்கும் அதிகாரம், வரி விதிக்கும் அதிகாரம், உள்ளூர் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம், பொதுச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் என்பவற்றை செயற்படுத்த முடியும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் கலப்பு முறை வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த 2012 அக்டோபர் 10 இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
இதன் படி, 70% உறுப்பினர்கள் வட்டாரங்கள் அடிப்படையில் நேரடியாகவும், 30% விகிதாசாரமுறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது கலப்பு வாக்குரிமையால் சில பிரதிகூலங்கள் இருப்பதாக சில சிறிய கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும் முறைப்பாடு செய்ததை அடுத்து, 2017 ஆகத்து 25 இல் மேலும் ஒரு திருத்தச்சட்டத்தை அரசு கொண்டு வந்தது.
இதன் படி, 60% உறுப்பினர்கள் வட்டாரங்கள் அடிப்படையில் நேரடியாகவும், 40% விகிதாசாரமுறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் 2012 டிசம்பர் 12 இல் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க ஜயலத் திசாநாயக்கா தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை அரசு நியமித்தது. இதன் அறிக்கை 2015 சூன் 19 இல் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வறிக்கையின் படி, உறுப்பினர்களின் எண்ணிக்கை 5,081 ஆக அதிகரிக்கப்பட்டது. 2015 ஆகத்து 21 இல் உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்கள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது. புதிய வட்டாரங்கள் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து, இது குறித்து ஆராய்வதற்கு அசோக்கா பீரிசு தலைமையில் ஒரு குழுவை நியமித்தது இக்குழுவின் அறிக்கை 2017 சனவரி 17 இல் சமர்ப்பிக்கப்பட்டது.
திருத்தப்பட்ட வட்டாரங்கள் பற்றிய விபரங்கள் 2017 பெப்ரவரி 17 இல் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுபவர்களில் 25% பெண்களாக இருக்க வேண்டும் என 2016 பெப்ரவரியில் அரசு திருத்தச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றியது. இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பொறுத்தவரை முதன்முதலில் 1865_முதலாவது நகராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது.
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஆரம்பக் காலமாக இது கருதப்படுகிறது. முதலில் கோலம்ப்புர, கண்டி மற்றும் கொழும்பு நகரங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
1911_- முதலாவது பொதுத்தேர்தல்: இந்த ஆண்டில், இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
மேலும் இது மக்களுக்குள் அரசியல் பங்கேற்பை அதிகரிக்க உதவியது. இந்தத்தேர்தலில், பொதுநிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மாற்றங்களைப் பெற்றன.
1947 சுதந்திரத்திற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றது. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரே, உள்ளூராட்சி மன்றங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சில மாற்றங்களை பெற்றன. 1950 உள்ளூராட்சி மன்றங்களின் விரிவாக்கம் இந்தக் காலத்தில், இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கி, நகர, கிராம, மற்றும் மாவட்ட அளவில் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கியது.
1980_- முழு வடிவமைப்புகளின் உருவாக்கம்: இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முக்கியமாக பிரபலமாகி, மக்கள் தங்கள் தேவைகளை தீர்க்க உதவும் நிலைமைகள் உருவாக்கப்பட்டன.
1990 காலப்பகுதி_ – உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் உயர் காலம்: இந்த ஆண்டுகளில், உள்ளூராட்சி மன்றங்கள் பல்வேறு தேர்தல்களை நடத்தி, மக்களிடையே அரசியல் செயல்பாட்டை அதிகரித்தன.
2000-_ முறைப்படுத்தப்பட்ட தேர்தல்கள்: 2000களில், இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் முறைப்படுத்தப்பட்ட தேர்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2011_ – மாநில மற்றும் மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:
2011ஆம் ஆண்டில், இப்போதைய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது.
2018_ – உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 2018ஆம் ஆண்டு, இலங்கையில் மிக முக்கியமான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், உள்ளூராட்சி மன்றங்களின் வாக்கு பிரிவுகள் மற்றும் அங்கத்துவப் பிரச்சினைகள் முக்கியமாக திருப்பத்தைக் கொண்டு வந்தன.
2018 இற்கு பின்னர் இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவில்லை. ஆட்சி மாற்றங்கள் பொருளாதாதர பிரச்சனைகள் போன்றகாரணங்களினால் நடைபெறவில்லை.
2023 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அது கை கூடவில்லை.
இலங்கையில் பொருளாதார சிக்கல் நிலைமையின் காரணமாக தபால்மூல வாக்குச் சீட்டுக்கள் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அனுரா அரசாங்கத்தினால் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்பட வேண்டியதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெறுக்கொண்டிருக்கின்றன.
அதற்காக வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வெவ்வேறு காலங்களில் வித்தியாசமான மாற்றங்களை, அரசியல் அசாதாரணங்களை சந்தித்துள்ளது.
இது, மக்கள் வாக்குகளின் மூலம் பொது பரிசீலனை மற்றும் மக்கள் உரிமைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதை காட்டுகிறது. இதேவேளை அண்மைக்காலமாக உள்ளுராட்சி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன.
எவ்வாறெனினும் எதிர்வரும் உள்ளூராட்சி சிறுபான்மையினர் சிந்தித்து,கட்டுக்கோப்புடன் வாக்களித்து தமது பிரதிநித்துவத்தை அதிகரித்துக்கொள்ள முற்பட வேண்டும்.
அரசியல் உரிமை ஏனைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள அடிப்படையாகும் என்பதை மறந்து விடக்கூடாது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




