நீரிழிவு நோயாளிகளுக்கான ஜூஸ் வகைகள்

#Health #Fruits #people #Lanka4 #Diabetics
Prasu
1 year ago
நீரிழிவு நோயாளிகளுக்கான ஜூஸ் வகைகள்

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் என்ன சாப்பிட்டாலும் முழு உணவாக சாப்பிட வேண்டும், ஜூஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அவர்களும் கூட சில குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட ஜூஸ்களை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.

பாகற்காய் ஜூஸ்

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஜூஸ் என்றால் அது பாகற்காய் ஜூஸ் தான். இது தினமும் எடுத்துக் கொள்ள முடியாமல் போனாலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய ஆரம்பிக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ்களில் ஒன்றாக இந்த நெல்லிக்காயை சொல்லலாம். இந்த நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் மற்றும் மினரல்களும் அவற்றோடு அதிகப்படியான அளவு ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இருக்கின்றன.

இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யும்.

மாதுளை ஜூஸ்

சர்க்கரை நோயாளிகள் அதிகமாக பழங்களில் செய்த ஜூஸ்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் மாதுளை ஜூஸ் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மாதுளையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகியவற்றோடு நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இதில் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் குடிக்க வேண்டிய ஜூஸ்களில் முக்கியமானது என்றே சொல்லலாம்.

கேரட்டில் வைட்டமின்கள். மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இதில் காம்பளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து அதிக கலோரிகள் எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க உதவி செய்கிறது.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ் வைட்டமின் சி நிறைந்தது. இதை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் காலை நேரத்தில் தக்காளி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் அவர்களுக்கு இதய நோய் ஆபத்துகள் அதிகம் இருக்கும் என்பதால் ரத்தம் உறைதலைத் தடுத்து ஆபத்தைக் குறைக்க தக்காளி ஜூஸ் உதவி செய்யும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742676244.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4