தென் கொரியா காட்டுத்தீ: நால்வர் மரணம் - அவசரநிலை பிரகடனம்

தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சான்சியோங் கவுண்டியில் தொடங்கிய தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டது.
சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது. சான்சியோங்கிலிருந்து 260க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கொரியா வனத்துறை தீயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது, மேலும் சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



