யாழ் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மலையக மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழகத்தின் 39 வது பொது பட்டமளிப்பு விழாவில் புசல்லாவை, சோகம தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த செல்வி கலைச்செல்வன் சந்திரலேகா, பொறியியல் தொழில்நுட்பம் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவியாவார். தனது வெற்றிக்கு துணை நின்ற பெற்றோர், ஆசிரியர்கள் நண்பர்கள் மற்றும் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் சந்திரலேகா நன்றி தெரிவித்துள்ளார்.
அவர்களை தொடர்ந்து, தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்ற கேம்ப்ரி தோட்டத்தை சேர்ந்த போல்ராஜ் சபேஷ்ராஜ். லிந்துலை - தங்கக்கலை, கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பொல்ராஜ் சபேஷ்ராஜ் (ஹரீஷ்) தனது கல்விப் பயணத்தில் முக்கியமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
மலையக மாணவர்கள் பலரும் உயர்கல்வியில் முன்னேறி வரும் நிலையில், இவரது சாதனை இன்னொரு முக்கியமான உதாரணமாக விளங்குகிறது. லிந்துலை - மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் 1-11ஆம் வகுப்பு வரை முடித்த இவர், அக்கரப்பத்தனை ஹோல்ப்ரூக் விஞ்ஞான கல்லூரியில் 2016-2018 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையை முடித்தார்.
அதன் பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 4 வருட பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கட்டிடத் தொழில்நுட்பத்துறையில் சிறப்பு பட்டம் பயின்று, கடந்த மார்ச் 19ஆம் தேதி தனது பட்டத்தைப் பெற்றுள்ளார்.
நான்கு ஆண்டுகளாக பல சவால்களுக்கு மத்தியில் தனது கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர், மலையக மாணவர்களுக்கு ஒரு முக்கியத்துவமான முன் உதாரணமாக இருக்கிறார்.
கல்வியில் சிறந்து, தொழில்நுட்ப துறையில் முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு அவரது பயணம் ஊக்கமளிக்கக்கூடியதாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை