இலங்கை அதிகாரிகளுக்கு பிரிட்டன் விதித்த தடையை வரவேற்ற கனடாவின் நீதியமைசர்

#SriLanka #Canada #Minister #Britain #officer #Banned
Prasu
1 week ago
இலங்கை அதிகாரிகளுக்கு பிரிட்டன் விதித்த தடையை வரவேற்ற கனடாவின் நீதியமைசர்

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன் . இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது.

2023 இல் கனடா , மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும்,சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும் என்றும் கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதிகள் முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய. கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742888379.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!