வாகன இறக்குமதிக்கு வரி விதிக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாம் அறிவித்த அனைத்து வரிவிதிப்பு நடவடிக்கைகளையும் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் அமல்படுத்தப் போவதில்லை என்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் சில நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த வரிவிதிப்பு தற்போதைக்கு நடப்பிற்கு வராது என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அது என்னென்ன வரிவிதிப்பு என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த அறிவிப்பால் பங்குச் சந்தை சற்று மீண்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை குறையத்தொடங்கியுள்ளது. இதற்கிடையே வாகனங்கள், மருந்து, அலுமினியம், பகுதி மின்கடத்தி உள்ளிட்ட துறைகளிலும் வரிவிதிப்பை விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுபற்றியும் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்காமீது வரி விதித்துள்ள நாடுகள்மீது அதிபர் டிரம்ப் வரிவிதிக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே வெனிசுவெலாவிடமிருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள்மீது கூடுதலாக 25% வரி விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



