கனடாவில் குடியிருப்பில் தீ விபத்து - $5 மில்லியன் நட்டம்

#Canada #fire #Building
Prasu
6 days ago
கனடாவில் குடியிருப்பில் தீ விபத்து - $5 மில்லியன் நட்டம்

மார்கம் நகரில் கட்டுமானத்தில் இருந்த குடியிருப்புகளுக்குள் பரவிய தீ, காரணமாக ஐந்து மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நகரின் தீயணைப்பு துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

பழைய கென்னடி சாலை மற்றும் ஆல்டர்கிரோவ் டிரைவ் அருகே கட்டுமானத்தில் இருந்த குடியிருப்பு தொகுதியில் தீ பரவியது. அந்த குடியிருப்புகள் காலியாக இருந்ததால், மக்களுக்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.

"நாங்கள் மூல கட்டிட தொகுதியில் உள்ள நான்கு குடியிருப்புகளை இழந்தாலும், வடக்கு பகுதியில் இருந்த ஆறு குடியிருப்புகள் மற்றும் மேற்கு பகுதியில் இருந்த 12 குடியிருப்புகளை பாதுகாக்க முடிந்தது," என மார்கம் தீயணைப்பு துறை தலைவர் கிரிஸ் நீரிங் தெரிவித்துள்ளார்.

பெரும் தீயினால் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் தீவிரமாக எரிந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தீ பற்றிய காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீவிபத்துக்கான காரணத்தை வெளிக்கொணர மார்கம் தீயணைப்பு துறை மற்றும் தீ பாதுகாப்பு அலுவலகம் (OFM) இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742974127.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!