பொது தேர்தலை அறிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
#PrimeMinister
#Election
#Australia
Prasu
4 days ago

ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பனீஸ் நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



