புனித ரமலான் - அதன் வரலாறும், முக்கியத்துவமும்!

#SriLanka #Article #Muslim
Lanka4
1 day ago
புனித ரமலான் - அதன் வரலாறும், முக்கியத்துவமும்!

இஸ்லாமிய நாள்காட்டியில் ரமலான் மாதம் புனித மாதமாக கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்த மாதத்தில் தான் அல்லாஹ் வானவ தூதர் ஜிப்ரியில் அதாவது அலை மூலமாக இறைதூதர் முஹமது ஸல் அவர்களிடம் புனித குரான் வசனங்களை அறிவிக்க செய்தான்.

பருவம் மனதலவிலும், உடலலவிலும் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும்.

நோன்பு காலை தொழுகையை அடிப்படையாக வைத்து தொடங்கபடுகிறது. சூரியன் உதயமாகும் வேலையில் நோன்பு விடப்படுகிறது. இதன் போலவே ரமலான் மாதம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

சில மக்களுக்கு ரமலானில் விலக்கு அளிக்கபடுகிறது. அதாவது மனதளவில் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பருவம் அடையாத குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களால் முடியாத பட்சத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

அதற்கு பரிகாரமாக, அவர்கள் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்காவது உணவு தந்திருக்க வேண்டும்.

மாதவிடாய் பெண்களுக்கும் விலக்கு அளிக்கபடுகிறது, மாதவிடாய் நீங்கிய பிறகு தொடரவேண்டும், அவர்கள் தவறவிட்ட நோன்பை பின்னர் வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கடமை இல்லை என்றாலும், பயிற்சியாக கடைபிடிக்க செய்யலாம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நோன்பின் முக்கியதுவத்தை உணர்த்தி பயிற்சி தரலாம். படிபடியாக அரை நாள் அல்லது அவர்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அதுவரை என்று குழந்தைகளுக்கு கற்று தரலாம்.

நோன்பானது இஸ்லாமிய அடிப்படை 5 கடமைகளில் ஒன்றாகும். அது அல் ஹிஜ்ரா 2ம் ஆண்டு முதல் கடமையாக்கபட்டுள்ளது. அல் ஹிஜ்ரா என்பது இடம்பெயர்வு ஆகும், இறைதூதர் முஹமது ஸல் அவர்கள் தன்ணை பின்பற்றுபவர்களுடன் தான் பிறந்த மக்கா நகரிலிருந்து மதினா நகரை நோக்கி எதிரிகளின் சதிகளிலிருந்து பாதுகாத்துகொள்ள இடம்பெயர்ந்தார்கள்.

நோன்பானது பக்குவத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுதருவதோடு, பசி மற்றும் உணவு இழந்து வாழும் மக்களின் உணர்வுகளை நினைவு கூறவும், அவர்களுக்கு சேவை செய்யவும் உதவுகிறது.

மற்றும் உடலலவில் பல நன்மைகளை தருகிறது, தேவயற்ற நச்சுகளை நீக்கி உடலை செம்மபடுத்திகிறது, செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி தூண்டுகிறது.

முஸ்லிம்கள் இம்மாதத்தில் அதிக நேரம் தொழுகை, பிறார்த்தனை துவா , புனித குரான் ஓதுதல், ஏழைகளுக்கு அதிகமாக தர்மங்களை செய்வது என செலவுசெஎவார்கள். இம்மாதத்தில் நன்மையானது பல மடங்காக அல்லாஹ்விடமிருந்து கிடைக்கபெறும். இம்மாதத்தில் முஸ்லிம்கள் சுய ஒழுக்கத்துடன் அதிக பக்தியாகவும், தரளமாகவும் நடந்துகொள்வார்கள்.

நோன்பாளிகள் கண்டிப்பாக உணவிலிருந்தும், பருகுவதிலிருந்தும், பாலியல் நடவடிக்கைகளிருந்தும் விலகி இருக்க வேண்டும். பொய் சொல்வது, கேலி செய்வது, மற்றவர்களை அவமதிப்பது (பொதுவாக இஸ்லாமில் தடைவிதிக்கப்பட்டுள்ளது) குற்றங்களாகும்.

ரமலான் கடைசியில் ஒவ்வொரு முஸ்லிமும் ஜக்காத் அல் பித்தர் என்ற பெயரில் ஏழை எளியவர்களுக்கு உதிவி செய்வார்கள். இதன் நோக்கம் ஈத் (ரமலான்) கொண்டாட யாருக்கெல்லாம் வசதி இல்லையோ அவர்களுடைய அடிப்படை உணவு மற்றும் உடைக்காக இவ்வுதவி பயன்படும்.

ரமலானில் முஸ்லிம்கள் குடும்பமாகவும், நண்பர்களாகவும் ஒவ்வொரு இப்தாரிலும்( நோன்பு விடுப்பு ), சொஹரிலிம் கூடுவார்கள்

மற்றும் தராவிஹ் (இரவு வணக்கம்) தொழுகை ரமலானில் முக்கியாமான ஒரு பிறார்த்தனையாகும். இது ஒவ்வொரு இஷா தொழுகைக்கு பின் நடைபெரும்.

இன்னும் சில நாடுகளில் வீடு, தெரு என அலங்கரித்து, விளக்குகளை (Lights) ஏற்றி கொண்டாடுவார்கள்.

அதிக முஸ்லிம்கள் ரமலானில் மக்காவுக்கு புனித பயனம் செய்வார்கள் (உம்ரா). ரமலானில் கடைசி 10 தின நோன்புகள் மிகமுக்கியமானதாகும், எனெனில் லைலத்துல் கத்ர் இரவு ஆகும். லைலத்துல் கத்ர் இரவு என்பது சரியாக இறைதூதர் முஹமது (ஸல்) அவர்களுக்கு குரான வசனங்கள் கிடைக்கபெற்றதாக இருக்க வேண்டும். லைலத்துல் கத்ர் உடைய நன்மையானது 1000 மதாங்களை விட சிறந்தாக கூறபடுகிறது.

ரமலானானது கருனை, பகிர்வு, குடும்பம், இறைவனுன் நெருக்கம்.

ரமலான் நோன்பு முடித்த பிறகு முஸ்லிம்கள் புதிய ஆடை, உணவு, இனிப்புகள் என குடும்பத்தோடும், நண்பர்களோடும் சிறப்பு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு ஈட் அல் பித்தர் என்ற ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!