சீன அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
#China
#America
#Official
#sanctions
Prasu
23 hours ago

சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் அரசாங்கத்துக்கு எதிராக 2019-ல் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
இதனை ஒடுக்குவதற்காக ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அமெரிக்கர்கள் உள்பட 19 பேர் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர்.
இதனால் நாடு கடத்த அடக்குமுறையில் ஈடுபட்டதாக கூறி சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த 6 அதிகாரிகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
ஏற்கனவே வர்த்தக வரி உயர்வு மற்றும் தைவான் விவகாரத்தில் இரு நாடுகள் இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் தற்போதைய இந்த பொருளாதார தடை மேலும் பதற்றத்தை தூண்டி உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



