உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 32 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

மூன்று என்ற குருவும் இரண்டு என்ற சந்திரனும்
இணைந்து குரு சந்திர யோகத்தை இந்த 32 ம் எண் கடக ராசியில் வந்து புதனின்
ஆதிக்கத்தை வெளிபடுத்துவதால் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு ஏற்ற
இறக்கங்கள் மாறி மாறி வரும் .
" 6 செங்கோல்களும் அரசனும்
குதிரையும் " போன்ற எகிப்திய படங்கள் வீரதைய்ம் சக்தியையும் குறிக்கும்
வகையில் இந்த 32 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன .
"ஸகல
காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி
கூறுகின்றன. மங்காத புகழும் குன்றாத செல்வமும் மின்னல் போன்ற பளிச்சிடும்
அறிவு கூர்மையும் வசீகரமான தோற்றமும் பொது ஜன ஆதரவும் சுலபத்தில்
பிரமுகராவதும் இந்த எண்ணினர் விளங்குவர் .
புத்திசாலி தனம்
வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசும் திறனும் சினிமா இசை அரசியல்
வியாபாரம் போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது
இந்த எண் .
அடுத்தவர் ஆலோசனையை கேட்காமல் தனது மனதில் உதிக்கிற படி
நடந்து வந்தால் வெற்றி மேல் வெற்றி உண்டாகியபடியே இருக்கும் . அந்தஸ்தில்
மேம்பட்ட மனிதர்களும் உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும்.
தொழில் உத்தியோகம் நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும் இந்த
எண்ணிற்க்கு உண்டு.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



