அமெரிக்காவின் வரி விதிப்பு: பங்குச்சந்தை, ஆடை ஏற்றுமதிக்கு விழுந்த அடி! இலங்கைக்கு வரப்போகும் ஆபத்து

#SriLanka #America #taxes #Export #Lanka4 #shelvazug #SHELVA FLY
Mayoorikka
1 week ago
அமெரிக்காவின் வரி விதிப்பு: பங்குச்சந்தை, ஆடை ஏற்றுமதிக்கு விழுந்த அடி! இலங்கைக்கு வரப்போகும் ஆபத்து

அமெரிக்க ஜனதிபதி டொனால்டு ட்ரம்ப் அண்மையில் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதித்துள்ளார். 

இந்த வரி விதிப்பானது இலங்கைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்தோடு தீர்வை விதிப்பினால் இலங்கை மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் நிபுணர்களினால் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை நாடுகள் விதிக்கின்றன. 

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு விதிக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும். முதலில் உள்ளூர் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் இவை விதிக்கப்படலாம், அரசுக்கு கணிசமான வருவாய் ஈட்டும் ஆதாரங்களில் ஒன்று இறக்குமதி வரிகள் என்பதால் வருவாய் உருவாக்குவதற்காக வரிகள் விதிக்கப்படலாம், வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக வரிகள் விதிக்கப்படலாம்.

 இதில் வர்த்தகப் பற்றாக்குறையையே அமெரிக்கா தனது வரி விதிப்புகளுக்கு காரணமாக குறிப்பிடுகிறது. இந்த வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவே பரஸ்பர வரிகளை விதிப்பதாக அமெரிக்கா கூறுகிறது. இந்த நிலையில் இலங்கையை பொறுத்தவரை அமெரிக்கவின் வரி விதிப்பிற்கு பின்னர் பங்குச்சந்தை பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது.

 கடந்த 3 வர்த்தக நாட்களுக்குள் பாரிய சரிவை சந்தித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி வர்த்தக முடிவில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 16,007.44 சுட்டெண்களாக பதிவாகியிருந்தது. நேற்றையதினம் 14,660.45 புள்ளிகளாக பாரிய சரிவைப் பதிவு செய்தது. இந்த 3 வர்த்தக நாட்களில் மட்டும், கொழும்பு பங்குச் சந்தை 1,346.99 புள்ளிகள் அல்லது 8.41 சதவீதம் சரிந்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி நிலவரத்திற்கமைய, 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகிய கொழும்பு பங்குச் சந்தை, நேற்று வரையில் 5,253.18 பில்லியனாக குறைந்துள்ளது.

 நேற்றைய தினம் மட்டும் பங்குச் சந்தைக்கு 227 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஆடை ஏற்றுமதி க்கும் பாரிய தாக்கத்தை செலுத்தவுள்ளது. இலங்கை கிட்டத்தட்ட 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஆடை துறை உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அவற்றுக்கு 44 வீத தீர்வை வரி விதிக்கப்படவிருக்கிறது. இலங்கை வருடமொன்றுக்கு 12 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தை பெறுகிறது. அதில் அமெரிக்காவுக்கும் மட்டும் இலங்கை கிட்டத்தட்ட 3000 மில்லியன் அதாவது 3 பில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. 

இது இலங்கை ஏற்றுமதி வருமானத்தின் கிட்டத்தட்ட 25 வீதமாகும். இதற்கு 12.2 வீதம் இதுவரை அறவிடப்பட்டது. ஆனால், இலங்கை அமெரிக்காவிடமிருந்து சுமார் 300 மில்லியன் அளவுக்கே இறக்குமதி செய்கிறது. இதற்கு இலங்கை கிட்டத்தட்ட 88 வீதமான தீர்வைகளை விதிக்கிறது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இலங்கைக்கு அதிக இலாபம் கிடைக்கிறது. இந்நிலையில் இலங்கை விதிக்கின்ற 88 வீதத்தில் அரைவாசியான 44 வீதத்தை இலங்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தீர்வையாக விதித்திருக்கிறார்.

 அதாவது இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செலவை குறைக்கும் நோக்கிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையின் இறக்குமதிகளுக்கு 44 வீத தீர்வையை அமெரிக்கா விதித்துள்ளதால் இலங்கையிலிருந்து ஆடை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்கின்றவர்கள் அடுத்து எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாகும். ‘இந்த வரி விதிப்பினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பாதிக்கப்படலாம்.

 இலங்கையை விட குறைவான வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளிடம் அமெரிக்க வர்த்தகர்கள் இறக்குமதி செய்யலாம். குறிப்பாக பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு இலங்கையை விட குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்க வர்த்தகர்கள் அந்த நாடுகளை நாடலாம். இது இலங்கையின் ஆடைத் துறையை பாதிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்.

 இலங்கை அமெரிக்காவுக்கு 3000 மில்லியனுக்கு செய்கின்ற ஏற்றுமதியில் ஆடைத் துறை உற்பத்திகளே அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் இறப்பர், தேயிலை உள்ளிட்ட 80 வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், ஆடை உற்பத்திகளே அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. இலங்கையை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமெரிக்கா தீர்வை வரியை விதிக்கவில்லை. 

அமெரிக்காவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சகல நாடுகளுக்கும் இந்த தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.பொதுவான கொள்கை அடிப்படையில் அமெரிக்கா இந்த வரி விதிப்பை அமுல்படுத்தியுள்ளது. அமெரிக்கா வர்த்தக பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். 

ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பின்னர் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வை வரி வீதத்தை குறைத்துக் கொள்வது தொடர்பில் கோரிக்கை முன்வைக்க முயற்சித்துள்ளோம்’’ என்று அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டிருக்கிறார். 

 இது இவ்வாறிருக்க அமெரிக்கா இலங்கையிலிருந்தான இறக்குமதிக்கு வரி விதித்துள்ளதால் அந்நாட்டுக்குள் குறித்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். அதாவது, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்ற இலங்கையின் ஆடை உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்கலாம். இது அமெரிக்க மக்களின் கொள்வனவு சக்தியை பாதிக்கும்.

 அத்துடன் பணவீக்கம் அதிகரிக்கலாம். ஆனாலும் கூட ஏற்றுமதி வருமானத்தைப் பெறுகின்ற இலங்கைக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என்பதும் திண்ணமே.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744087700.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!