ஜப்பானில் விபத்துக்குள்ளான மருத்துவ ஹெலிகாப்டர் - மூவர் மரணம்
#Death
#Accident
#Japan
#Helicopter
Prasu
1 week ago

ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில், ஒரு நோயாளி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு வயதான நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதைத்தொடர்ந்து இரண்டு கடலோர காவல்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மருத்துவர், நோயாளி மற்றும் பராமரிப்பாளர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



