தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

#SriLanka #Jaffna #Protest #Lanka4 #Thaiyiddi #ADDAADS #SHELVA FLY
Mayoorikka
6 hours ago
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

வலி. வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி இன்றைய தினம் காணி உரியாளர்கள் போராட்டத்தினை மீளவும் ஆரம்பித்துள்ளனர். 

 தற்போதைய அரசும் தொடர்ச்சியாக தமக்கான நீதியினை வழங்க மறுத்துவருவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 தங்களுடைய போராட்டம் இரண்டு வருடங்கள் கடந்தும் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என தெரிவித்த போராட்டக்காரர்கள், எமது நிலத்தை மீட்கும் வரைக்கும் எமது போராட்டம் தொடர்ந்து செல்லும் என தெரிவித்தனர்.

 தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து கொண்டுள்ளனர். இன்றைய தினம் பூரணை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744410205.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!