சாதனை படைத்த ஜனநாயகன் டிரெய்லர்
#TamilCinema
#trailer
#World
#Movie
Prasu
2 months ago
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் 'ஜனநாயகன்'.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நேற்று வெளியானது.
ஜனநாயகன் டிரெய்லர் தற்போது வரை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 75 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )