நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் கையிருப்பில்! அமைச்சர் தகவல்

அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அநாவசிய பயத்தை ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நாட்டில் தேவையான இன்சுலின் இருப்பு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்து இருப்பை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் சில மருந்துகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், விநியோகஸ்தர்களின் பலவீனங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
இதை தவிர்க்க, பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ VIDEO)
அனுசரணை



