கிளிநொச்சியில் தபால் மூல வாக்களிப்பிறகு 3,865 பேர் வாக்களிக்க தகுதி..!
#SriLanka
#Election
#Kilinochchi
#Lanka4
#Local council
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
9 hours ago

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் 3,865பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக பதில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி ,கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைக்காக தபால் மூலம் 3,865பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 102,387பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் மூன்று சபைகளுக்கும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
(வீடியோ VIDEO)
அனுசரணை



