கனடாவில் தெரு திருவிழாவில் புகுந்த வாகனம் - 11 பேர் மரணம்

கனடாவின் வான்கூவர் நகரில் கார் ஒன்று கூட்டத்துக்குள் சென்றது.இச்சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமுற்றதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று வான்கூவர் காவல்துறையினர் நம்புகின்றனர்.
30 வயது சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் ஒருவர் ஈஸ்ட் 41வது அவென்யூ அண்ட் ஃபிரேசர் பகுதியில் சாலை நிகழ்ச்சியில் திரண்டிருந்தோர் மீது காரைச் செலுத்தியதாக காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ‘லப்பு லப்பு’ நிகழ்ச்சியின்போது பாதசாரிகள் சிலரை கார் மோதியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. ‘லப்பு லப்பு’, பிலிப்பீன்ஸ் கலாசாரத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



