நடிகர் அஜித்குமார் வைத்தியசாலையில் அனுமதி

#Actor #TamilCinema #Hospital #ajith
Prasu
7 hours ago
நடிகர் அஜித்குமார் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் அஜித்துக்கு நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விழாவுக்கு குடும்பத்துடன் சென்ற அஜித் நேற்று மாலை சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நடிகர் அஜித் இன்று காலை திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுபற்றி அவரது தரப்பில் விசாரித்தபோது, நடிகர் அஜித் பத்மபூசன் விருது பெறுவதற்காக டெல்லிக்கு சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது. 

இதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி கடந்து சென்றார்.

இந்த நிலையில் காயம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என கூறினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746038876.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!