சிகிச்சைக்காக சிறுநீர் குடித்த சூரரைப் போற்று நடிகர்

பாலிவுட் திரையுலகத்தில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பரேஷ் ராவல். பாலிவுட் தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்தின் வில்லனாக நடித்தவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்," தனக்கு ஏற்பட்ட முட்டி காயம் சீக்கிரம் குணமடைவதற்காக தனது சிறுநீரை 15 நாட்களுக்குக் குடித்ததாகக் கூறியுள்ளார்.
இந்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
சிகிச்சையின்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறிய மருத்துவர்கள் அது குணமடைய மூன்று மாதங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளனர். மேலும், தன்னை பார்க்க வந்த நடிகர் அஜய் தேவகனின் தந்தை தினமும் காலையில் கழிக்கும் தனது சிறுநீரை 15 நாட்களுக்கு குடித்து வர கூறினார்.
அந்த 15 நாட்களுக்கு இறைச்சி, மது, சிகரெட் போன்ற பழக்கங்களும் இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியதாக கூறினார். அவர் கூறியதுபோல் தானும் அதை பின்பற்றினேன்.
மேலும், 15 நாட்களுக்கு பிறகு எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது எனது காயம் சரியானது. மூன்று மாதங்கள் ஆகும் என கூறிய நிலையில், ஒன்றரை மாதங்களிலேயே தான் முழுவதுமாக குணமடைந்துவிட்டேன். அதற்கு தான் குடித்த என்னுடைய சிறுநீரகம் தான் காரணம்" என கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



