இன்றிலிருந்து விடைபெறுகிறது Skype! மைக்ரோசாப்ட் எடுத்த அதிரடி முடிவு

#Lanka4 #technology #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 hours ago
இன்றிலிருந்து விடைபெறுகிறது Skype! மைக்ரோசாப்ட் எடுத்த அதிரடி முடிவு

 இன்றிலிருந்து ஸ்கைப் (Skype) சேவையை நிறுத்தியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் அறிவித்துள்ளது.

 இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக வழங்கி வந்த ஸ்கைப் தளத்தை, ஸ்வீடன் (Sweden) மற்றும் எஸ்டோனியாவைச் (Estonia) சேர்ந்த மென்பொறியாளர்கள் 2003 ஆம் ஆண்டு உருவாக்கினர்.

 விண்டோஸ் லைவ் மெசென்ஜர் (Windows Live Messenger) சேவைக்கு மாற்றாக சுமார் 8.5 பில்லியன் டொலருக்கு ஸ்கைப் தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது. இந்த சேவைக்கும் உலகம் முழுவதும் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 2023 கணக்கின்படி சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

  இந்த நிலையில், ஸ்கைப் சேவையை மே ஐந்தாம் திகதியுடன் நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 “Microsoft Teams” சேவையில் கவனம் செலுத்தவும், மக்கள் தங்கள் சேவையை எளிதாக பயன்படுத்தும் வகையில் சேவையை மாற்றியமைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746397919.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!