கனடா விற்பனைக்கு அல்ல - அமெரிக்க ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்த பிரதமர் கார்னி

கனடா விற்பனைக்கு அல்ல என அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வீட்டுமனை வியாபாரத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு சில இடங்கள் ஒருபோதும் விற்பனைக்கு வராது என்பது தெரிந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் தாம் கனடியர்களை சந்தித்தததாகவும், கனடா விற்கபடக்கூடிய நாடல்ல, எதிர்காலத்திலும் அல்ல,” எனவும் அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் நாங்கள் முன்னேற்றமடைந்துள்ள ஒத்துழைப்பு தான் மிகப்பெரிய வாய்ப்பு. பாதுகாப்பு தொடர்பாகவும், தமது அரசாங்கம் புதிய முதலீடுகளை மேற்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
எங்கள் கூட்டுறவையும் பாதுகாப்பையும் கட்டமைக்க நாங்கள் முழுமையாக செயல்பட தயாராக இருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



