மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

#SriLanka #Colombo #Student #Abuse #Tamil Student #Lanka4 #Teacher #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
8 hours ago
மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

கொழும்பு - கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் பிரத்தியேக வகுப்பின் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 மேற்படி மாணவி தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோது கருத்து வெளியிட்ட முஜிபுர் எம்.பி, இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை என்றும் சாடினார்.

 நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு 7, 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கு இடப்படுவார்களா என்று கேள்வியெழுப்பிய முஜிபுர், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்லவென கூறினார்.

 எவ்வாறாயினும் இந்த பிரச்சினையில் அரசியல் இலாபம் தேடக்கூடாதென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நயக்க இதன்போது குறிப்பிட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746722455.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!