புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த கனேடிய பிரதமர் மார்க் கார்னி

புதிய பாப்பாண்டவராக அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரெவோஸ்ட் தேர்வானதைத் தொடர்ந்து, கனடிய பிரதமர், மார்க் கார்னி அரசியல் மற்றும் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது உலகமெங்கும் உள்ள ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட விசுவாசிகளுக்கு நம்பிக்கையும், புத்துயிரையும் ஊக்கத்தையும் அளிக்கும் தருணம்," என பிரதமர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உலகம் எதிர்நோக்கும் தீவிரமான சவால்களுக்கிடையில், அவரின் பதவிக் காலம் ஞானத்தால், விவேகத்தால், பொது நலத்துக்கான அர்ப்பணிப்பால், மனிதக்கொள்கைகளை மதிப்பதால் நிரம்பியதாக இருக்கட்டும்," என குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டில் கனடாவின் மத்திய அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 10.8 மில்லியன் கனடியர்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஒற்றுமை, நியாயம் மற்றும் நிலைத்தத் தன்மையால் வழிநடத்தப்படும் உலகத்தை கட்டியெழுப்பும் பணியில் கனடா, புனிதர் பாப்பாண்டவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்குகிறது," என பிரதமர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



