புதிய பாபரசர் அருட்திரு. லியோவின் முதலாவது உரை

"உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் சமாதானம் உண்டாக!
அன்புடைய சகோதரர், சகோதரிகளே, இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் முதல் வாழ்த்து. நன்மைமிக்க மேய்ப்பன் அவர் தம் கூட்டத்துக்காக தம் உயிரை கொடுத்தவர். இந்த சமாதான வாழ்த்து உங்கள் இதயத்தில் பதியவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
உங்கள் குடும்பங்களை அடையவேண்டும், எங்கு இருந்தாலும் அனைத்து மக்களையும், அனைத்து சமூகங்களையும், இந்த முழு உலகத்தை சென்றடையவேண்டும். சமாதானம் உங்களோடு இருப்பதாக! இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சமாதானம்.
இது ஆயுதமற்ற, ஆயுதங்களை சாய்த்துவைக்கும் சமாதானம். இது தாழ்மையானதும் பொறுமையானதும் ஆகும். இது கடவுளிடமிருந்து வருகிறது — நம்மை நிபந்தனையில்லாமல் நேசிக்கும் கடவுளிடமிருந்து வருகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ்க்கஸின் மென்மையான, ஆனால் துணிவான குரலை நாங்கள் இன்னும் காதுகளில் கொண்டிருக்கிறோம் — அவர் உரோமைக் ஆசீர்வதித்தார்! உரோமைக் ஆசீர்வதித்த திருத்தந்தை, அந்த உயிர்த்த ஞாயிறு காலை, உலகை, முழு உலகையும் ஆசீர்வதித்தார். அந்த ஆசீர்வாதத்தை மீண்டும் நானும் வழங்க விரும்புகிறேன்:
"கடவுள் நம்மை நேசிக்கிறார், கடவுள் உங்களை அனைவரையும் நேசிக்கிறார். தீமை வெற்றிபெறாது!" நாம் அனைவரும் கடவுளின் கைகளில் உள்ளோம். எனவே பயமின்றி கடவுளுடன் கைகோர்த்து ஒருவரோடு ஒருவர் இணைந்து முன்னே செல்க! நாம் கிறிஸ்துவின் சீடர்கள். கிறிஸ்து நம்மை வழிநடத்துகிறார். உலகிற்கு அவரது ஒளி தேவை. மனிதகுலத்திற்கு கடவுளையும் அவரது அன்பையும் அடைவதற்கான பாலம் தேவை. நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், உரையாடல், சந்திப்பு மூலம் பாலங்களை கட்டி அனைவரையும் ஒன்றிணைத்து நிலையான சமாதானத்தில் ஒரே மக்களாக இருக்க நமக்கு உதவ வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ்க்கு நன்றி!
அப்போஸ்தலர் பேதுருவின் வாரிசாக என்னைத் தேர்ந்தெடுத்த என் சககார்டினால்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்: நாம் ஒன்றிணைந்த தேவாலயமாக, சமாதானத்தையும் நீதியையும் தேடி, இயேசு கிறிஸ்துவுக்கு விசுவாசமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக செயல்பட முனைந்தவர்களாக நாங்கள் செல்ல வேண்டும். பயமின்றி நற்செய்தியை அறிவிப்போம், மறைபணி செய்வோம். நான் பரிசுத்த ஆகஸ்தீனின் மகனாக இருக்கிறேன் — ஒரு ஆகஸ்தீனர் — அவர் கூறினார்:
"உங்களோடு நான் ஒரு கிறிஸ்துவன், உங்களுக்கான ஒரு பேராயர் (பிஷப்)" இந்த உணர்வோடு நாம் அனைவரும் கடவுள் நமக்காக தயார் செய்த அந்த வீட்டை நோக்கி செல்லலாம். உரோமின் திருச்சபைக்கு ஒரு சிறப்பு வாழ்த்து! நாம் எப்படி ஒரு மறைபணிக்கான திருச்சபையாக இருக்க முடியும் என்பதை ஒன்றாகவே ஆராய வேண்டும் — பாலங்களை கட்டும், உரையாடலை வளர்க்கும், விரிந்த கரங்களோடு அனைவரையும் ஏற்கும், இந்த மைதானம் போல.
அனைவரையும் – யார் எங்கள் இரக்கம், நெருக்கம், உரையாடல், அன்பை தேடுகிறார்களோ – அவர்களளை ஏற்கும் திருச்சபை நாம் ஆவோம். ஸ்பானிய மொழியில் அளித்த வாழ்த்து: நீங்கள் இன்னும் ஒரு வார்த்தையை அனுமதித்தால், நான் சிறப்பாக என் அன்பு டயோசிஸ் சிக்லாயோ (Chiclayo), பெருவின் மக்களுக்கு ஒரு வாழ்த்தைச் சொல்ல விரும்புகிறேன். அங்கு ஒரு விசுவாசமுள்ள மக்கள் குழு, தங்கள் பேராயர் வழிநடத்தி, தங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்து இன்னும் இயேசுவுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு திருச்சபையாக இருக்கச் சிறந்தவைகளை வழங்கி வந்துள்ளது.
இத்தாலி மொழியில் உரோமைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரிகளே, இத்தாலியிலிருந்தோ, உலகம் முழுவதிலிருந்தோ: நாம் ஒரு „ஒத்திசைந்த (சினோடல்)“ திருச்சபையாக இருக்க விரும்புகிறோம் — ஒரு பயணத்திலுள்ள திருச்சபை, எப்போதும் சமாதானத்தையும் இரக்கத்தையும் தேடும் திருச்சபை... மிகவும் அவசியமாகத் துன்புறும் மக்களுக்கு அருகில் இருக்க நினைப்பதொரு திருச்சபை. இன்று பம்பேயில் உள்ள மாதா மரியாளிடம் வேண்டும் நாளாகும்.
நம் தாயான மரியா எப்போதும் நம்முடன் நடக்க விரும்புகிறாள், நம்மை நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறாள், தன் வழியனுப்பல்களால், தன் அன்பால் நமக்கு உதவ விரும்புகிறாள். எனவே நாம் ஒன்றாகவே செபிக்க விரும்புகிறேன். இந்த புதிய பொறுப்புக்காக முழு திருச்சபைக்காக, உலக சமாதானத்திற்காக நாம் செபிப்போம்.
நம் தாய் மரியாவிடமிருந்து இந்த சிறப்பு அருளை நாம் வேண்டுவோம்.
"அவே மரியா, கிருபையால் நிரம்பியவளே, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். பெண்களில் ஆசீர்வதிக்கப்பட்டவளும், உங்கள் கருவின் கனியான இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரிசுத்த மரியா, தேவமாதா பாவிகளாகிய எங்களுக்காக இப்போது மற்றும் எங்கள் இறப்பின் நேரத்தில் வேண்டுங்கள்... ஆமென்."
-மொழிபெயர்ப்பு: சிவமகிழி-
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



