584 நாட்களுக்கு பிறகு 21 வயது அமெரிக்க பிணை கைதியை விடுவித்த ஹமாஸ்

பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 251 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
அதன்பின் பேச்சுவார்த்தைகள் மூலம் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தனர். ஹமாசிடம் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக உள்ளனர்.
இதற்கிடையே ஹமாசிடம் பிணைக்கதியாக உள்ள இஸ்ரேல் வாழ் அமெரிக்கரான இடன் அலெக்சாண்டரை விடுவிக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இதை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது.
இந்தநிலையில் இடன் அலெக்சாண்டரை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் கிசுபும் எல்லை வழியாக காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். 584 நாட்களுக்கு இடன் அலெக்சாண்டர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் ஹமாசிடம் பிணைக்கைதியாக இருந்த கடைசி அமெரிக்க - இஸ்ரேலியர் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



