இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

#SriLanka #Parliament #Human Rights #Britain #Member
Prasu
7 hours ago
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

'போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதித்ததுடன் பிரிட்டனின் கடமை முடியவில்லை. பிரிட்டன் இன்னும் அதிக பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது' என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மக்டோனா, 'பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் நாங்கள் துணையாக உள்ளோம். இலங்கையின் விடயத்தில் பிரிட்டன் தனது கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747413235.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!