சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் - 10 மாணவர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

#SriLanka #Arrest #students #University #HighCourt
Prasu
1 year ago
சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் - 10 மாணவர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழக 2ஆம் வருட மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களான மாணவர்கள் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29 அன்று, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் வருட மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.தான் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்திருந்தார்.

இருப்பினும், அவரது உறவினர்களும் நண்பர்களும், பல்கலைக்கழகத்தில் நிலவும் பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747431901.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4